கடவுள் இருக்கிறார் என்று ஒரு பிரிவு, கடவுளா அவர் யார் என்று கேட்கும் ஒரு பிரிவு , நான் இந்த சாதி என்னும் ஒரு பிரிவு , இந்த பிரிவுகளின் நோக்கம் தான் என்ன....???? இதன்கொள்கைகள் யாருக்கானது. .? மக்களின் வாழ்க்கைக்கானதா? ??? நமது வாழ்க்கையின் நோக்கம் தான் என்ன...??? இந்த வாழ்க்கை எதை நோக்கியது. ...??? என பல கேள்விகளுடன் பயணிக்கும் பல மனிதர்களில் நானும் ஒருவர்.
நம்ம வாழ்க்கையில் பணம் இருந்தால்தான் பசி வரும் என்று எதுவும் இல்லையே. பசி ,சோகம், அழுகை இவை அனைத்தும் பொதுவானது தானே பின்பு எப்படி பணம், நிலம் மட்டும் பொதுவானது இல்லை என்றாகும். பணம் மட்டுமே எதிர்காலம் என்று நம் தலைமுறைக்கு சேகரித்து வைத்தால் போதுமா. .? பணம் அவர்களுக்கு உணவளிக்குமா. ..? அப்போ நாம சேகரிக்க வேண்டியது எது....? பணம் ஒருவரின் வாழ்க்கையை நிர்ணயிப்பது சரியா. ...??? உலகின் பணகார பட்டியலில் இருக்கும் யாராவது ஒருவரால் தனது வாழ்கையின் அடுத்த நிமிடம் என்ன என்பதை நிர்ணயம் செய்து கொள்ளும் சலுகை உண்டா, அல்லது அயுளை நீட்டிக்க முடியுமா. .? அப்போ அந்த பணத்தின் மதிப்பு தான் என்ன ...? கடவுள் இருக்கிறார் என்றால் , அவர் படைக்காத பணம் முக்கியம் என்பது சரியா....? கடவுள் இல்லை என்றால் பணம் கடவுள் என்பது மட்டும் சரியா...? இந்த வாழ்க்கை என்னும் பயணம் எதை நோக்கியது. ...? நம் தலைமுறைக்கு எதை பாதுகாத்து தர போகிறோம், பணமா இல்லை இயற்கையையா....? எதை நோக்கியது உங்கள் பயணம். ..???
இப்படிக்கு
தனபவி